Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவிராஜ் கொலை வழக்கு: விடுவிக்கப்பட்டவர்களை உடன் கைதுசெய்யுமாறு உத்தரவு

In இலங்கை
Published: 07:03 GMT, Mar 29, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Varshini

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருந்த 3 கடற்படை புலனாய்வு அதிகாரிகளையும் உடன் கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் வழக்கு விசாரணைக் காலத்தில் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஏனைய மூவருடன் நடைபெற்ற விசாரணையில், ஜூரிகள் சைபையின் தீர்மானத்திற்கு அமைய, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களை விடுதலைச் செய்தது.

இதனை அடுத்து குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி, நடராஜா ரவிராஜின் மனைவியான சசிகலா நடராஜாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கு தொடர்பான அறிவிப்புக் கடிதத்தை குற்றம் சுமத்தப்பட்டுள்ள 3 பேரிடமும் சேர்க்க முடியாதிருப்பதாக ரவிராஜ் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்ததோடு, அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு அமைவாக அவர்களை கண்டுபிடிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg