Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்த ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

In
Published: 07:42 GMT, Mar 29, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Sylviya

ஸ்கொட்லாந்தில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது தொடர்பில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்கிழமை) ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதன் போது 69 பேர் இரண்டாவது கருத்துக்கணிப்பிற்கு ஆதரவளித்தும் 59 பேர் எதிர்ப்பு தெரிவத்தும் வாக்களித்திருந்தனர்.

பிரித்தானியாவில் உள்ள மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள பிரெக்சிற் விடயம் தொடர்பில் ஸ்கொட்லாந்து மக்கள் தீர்மானம் மேற்கொள்ள இந்த கருத்துக்கணிப்பு உறுதுணையாக அமையும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரெக்சிற் நடவடிக்கை முழுமையாக நிறைவுபெறும் வரை குறித்த இரண்டாவது கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படக் கூடாது என பிரித்தானிய அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg