Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய பிரதிநிதி பெல்ஜியத்திற்கு விஜயம்

In
Published: 09:48 GMT, Mar 29, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய பிரதிநிதி  சேர் டிம் பரோ (Tim Barrow), இன்று (புதன்கிழமை) பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்குடனான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்கும் அதன் பின்னர், பிரதமர் மேயினால் கைச்சாத்திடப்பட்ட பிரெக்சிற் கடிதத்தை ஒப்படைப்பதற்குமே அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மேயின் உத்தியோகபூர்வ பிரெக்சிற் கடிதம் கையளிக்கப்பட்டு பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முறைப்படி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தைகளே பிரித்தானியாவின் 2.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடைய பொருளாதாரம்  குறித்த எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, கடன் மற்றும் குடியேற்றவாசிகளின் நெருக்கடி ஆகியவற்றிற்கு முகங்கொடுத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரித்தானியாவின் விலகல் தீர்மானம் ஒரு பாரிய இழப்பாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg