Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவ உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு: நோயாளர்கள் அவதி

In இலங்கை
Published: 09:06 GMT, Mar 29, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Varshini

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலை மருந்தாளர்கள், ஆய்வுகூட உத்தியோகத்தர்கள் மற்றும் கதிரியக்க தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப் பணிப்புறக்கணிப்பினால், வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒன்றிணைந்த வைத்திய சேவைக்குரிய 5 சங்கங்களின் உறுப்பினர்கள், இன்று (புதன்கிழமை) காலை 8 மணியிலிருந்து 24 மணித்தியாலங்களுக்கு இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் எவ்வித தீர்வும் வழங்கப்படாத காரணத்தால் தாம் இப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

strike (2) strike (3) strike (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg