Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூதாட்டத்தில் சிக்கிய மொஹமட் இர்பானுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை

In கிாிக்கட்
Published: 04:03 GMT, Mar 30, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Anojkiyan
irg

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது சூதாட்டத்தில் சிக்கிய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு, கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 1 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இடம்பெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது, இர்பானை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக தகவல்கள் வெளியாகின.

இதைதொடர்ந்து குறித்த விடயத்தில் அவதானம் செலுத்திய, அந்நாட்டு கிரிக்கெட் சபை, ஊழல் தடுப்பு நடத்தை விதியை மீறியதாக மொஹமட் இர்பான் மீது குற்றச்சாட்டியது. இதன்பின் கிரிக்கெட் சபையின் விசாரணைக்குழு முன் ஆஜரான மொஹமட் இர்பான், சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை ஒப்புக்கொண்டார்.

இதனால், இர்பானுக்கு கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை, ஓராண்டு தடை விதித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg