Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளை மாளிகையின் ஊதியம் பெறாத ஊழியராக இவங்கா ட்ரம்ப்

In
Published: 05:57 GMT, Mar 30, 2017 |
0 Comments
1268
icon_com
This post was written by : Risha

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகப்பூர்வமற்ற ஆலோசகராக, ஊதியம் பெறாத வெள்ளை மாளிகை ஊழியராக தான் பணியாற்ற உள்ளதாக, ட்ரம்பின் மகளான இவங்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியின் ஆலோசகராக திகழ்வது தொடர்பில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குறித்த சர்ச்சைகள் எழக்கூடும் என்பதால், அதனை தவிர்க்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ஜனாதிபதியின் ஆலோசகராக நான் விளங்குவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதாக கேள்வியுற்றேன்.

நான் ஊதியம் பெறாத வெள்ளை மாளிகை ஊழியராக செயற்படும் அதேவேளை, ஏனைய வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு உள்ள அனைத்து விதிகளுக்கும் நானும் கட்டுப்படுவேன்’ என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, அமெரிக்காவில் மில்லியன் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான தனது தந்தையின் அர்ப்பணிப்பை பெரிதும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg