Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க காங்கிரஸ் வளாகத்தில் விபத்தை ஏற்படுத்த முற்பட்ட பெண் கைது

In
Published: 06:30 GMT, Mar 30, 2017 |
0 Comments
1221
icon_com
This post was written by : Risha

அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டி.சி.-இல் அமெரிக்க காங்கிரஸை அண்மித்த பகுதியில், பொலிஸ் வாகனமொன்றின் மீது காரை மோதி, அதிகாரிகளை காயமடையச் செய்ய முற்பட்ட பெண் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் கைது செய்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த மோதல் சம்பவமானது தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்டதல்ல என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நேற்றைய சம்பவத்தை அடுத்து அமெரிக்க காங்கிரஸ் வளாகம் பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு பாதுகாப்பு தளர்த்தப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய புலனாய்வுத்துறையினர் ஆரம்பித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் காரை மோதச்செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg