Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய அணி எங்களுக்கு சவால் கொடுத்த விதம் வியக்க வைத்துவிட்டது: கோஹ்லி

In கிாிக்கட்
Published: 07:24 GMT, Mar 30, 2017 |
0 Comments
1730
icon_com
This post was written by : Anojkiyan
vit

நடைபெற்றுமுடிந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலிய அணி, தங்களுக்கு சவால் கொடுத்த விதம் வியக்க வைத்துவிட்தாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

பல்வேறான விமர்சனங்களுக்கு மத்தியில், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் பின் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி நிருபர்களிடம் கூறுகையில், “எனது தலைமையில் இதுவரை வென்ற டெஸ்ட் தொடர்களிலேயே இது தான் சிறந்த வெற்றியாகும். இறுதியாக இங்கிலாந்தை தோற்கடித்த போது, அந்த தொடர் மிக தீவிரமாக இருந்தது என்று நினைத்தேன். ஆனால் அவுஸ்ரேலிய அணி எங்களுக்கு சவால் கொடுத்த விதம் வியக்க வைத்துவிட்டது. அதே நேரத்தில் எங்களது வீரர்கள் சரிவில் இருந்து மீண்டு, தங்களது மனஉறுதியையும், உண்மையான போராட்டக்குணத்தையும் காட்டி விட்டனர்.

ரஹானே அணியை அருமையாக வழிநடத்தினார். இறுதி டெஸ்டுக்கு முன்பாக ரஹானேவிடம் நான், ‘இது உங்களது போட்டி. 4 பந்து வீச்சாளர் தேவையா? அல்லது 5 பந்து வீச்சாளர்; தேவையா? எது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும்’ என்று கேட்டேன். அதற்கு அவர் 5வது பந்து வீச்சாளர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். இதைத் தொடர்ந்து 5வது பந்து வீச்சாளராக யாரை சேர்க்கலாம் என்று பயிற்சியாளர் கும்ளேயிடம் ஆலோசித்தோம். குல்தீப் யாதவை அவுஸ்ரேலியர்களுக்கு அதிகமாக தெரியாது. அதனால் அவரை துருப்பு சீட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

இந்த உள்ளூர் தொடரில் 13 டெஸ்டில் விளையாடி 10ல் வெற்றி பெற்றிருப்பது என்பது பெருமைமிக்க தருணமாகும். எல்லா தொடரிலும் நாங்கள் சிறந்த முறையில் விளையாடுகின்றோம். குறிப்பாக சொந்த நாட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளோம். உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பிரதான சவால் இப்போது தான் தொடங்குகிறது. இதே போன்று வெளிநாட்டிலும் வெற்றிகளை குவிக்கும் போது தான், எனது முகத்தில் நீங்கள் அதிகமான சிரிப்பை காண முடியும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg