Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவராக ட்ரம்பின் நீண்டகால நண்பர் பதவியேற்றார்

In
Published: 07:12 GMT, Mar 30, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Risha

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிக நீண்டகால நண்பரான டேவிட் ஃபிறீட்மன், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவராக நேற்று (புதன்கிழமை) இரவு பதவியேற்றுள்ளார். அமொிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் டேவிட் ஃபிறீட்மனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பின்மூலம் ஃபிரீட்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது ஃபிறீட்மனுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அதன்படி பதவியேற்பின் பின்னர் உரையாற்றி ஃபிறீட்மன், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன். அதன்படி, அந்த நம்பிக்கையை நிலைநிறுத்த என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

ட்ரம்பின் நிர்வாகம், இஸ்ரேல் அரசாங்கத்துடன் எமது அசைக்க முடியாத உறவிற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ராஜதந்திர ரீதியான எவ்வித அனுபவங்களையும் கொண்டிராத இவர், ட்ரம்பின் மிக நீண்டகால நண்பரும், ட்ரம்பின் கணக்குகள் தொடர்பான வழக்கறிஞராகவும் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg