Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய நாடாளுமன்ற வளாக தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

In
Published: 07:38 GMT, Mar 30, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Risha

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் நால்வர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள், உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் தாக்குதலில் காயமடைந்தோர் எனப் பெருந்திரளானோர் கலந்துக் கொண்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த 22ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் பாதசாரிகள் மீது தாக்குதல்தாரி ஒருவர் காரொன்றை மோதச் செய்ததுடன், பின்னர் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்ததுடன், 35இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து தாக்குதல்தாரி பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg