Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட இந்தியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் குறைந்தது 25 பேர் காயம்

In இந்தியா
Published: 10:25 GMT, Mar 30, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Elakkiya

வட இந்தியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த மகாகௌசால் அதிவிரைவு பயணிகள் ரயில் இன்று அதிகாலை 2.07 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது ரயிலின் எட்டு பெட்டிகள் தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி ரயில் தடம்புரண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக ரயில்வெ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg