Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக வாய் சுகாதாரத்தை முன்னிட்டு முசலியில் விழிப்புனர்வு நிகழ்வு

In இலங்கை
Published: 10:33 GMT, Mar 30, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Anojkiyan
lam

உலக வாய் சுகாதாரத்தை முன்னிட்டு, முசலியில் முன்பள்ளி சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு கருத்தமர்வும், விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

‘சுகாதாரமான வாய் வாழலாம் மிடுக்காய்’ எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற குறித்த நிகழ்வு, முசலி சுகாதார வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில், வெளிமலை பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம வளவாளராக பிராந்திய பல்வைத்திய அதிகாரி வைத்தியர் சிறிதேவி வேதவனம் கலந்து கொண்டார். இதன்போது கலந்துக்கொண்ட அனைவருக்கும், பல்துலக்குவதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது வைத்தியர் மேரி அமிலா. வைத்தியர் எஸ். ஜெயபாரதி. மற்றும் பல்வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் யு.மதீன், பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

yt

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg