Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவுடன் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள கனடா விருப்பம்

In கனடா
Updated: 11:35 GMT, Mar 30, 2017 | Published: 11:35 GMT, Mar 30, 2017 |
0 Comments
1211
This post was written by : Anojkiyan

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியுள்ள பிரித்தானியாவுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பிலான அதிகாரபூர்வ கோப்பில் பிரித்தானியா பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ கூறுகையில்,

“பிரித்தானியாவுடன் வர்த்தக ரீதியான எங்கள் நட்பு தொடரும். வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பிரித்தானியாவோடு இன்னும் நெருக்கம் காட்டவே விரும்புகிறோம். பிரித்தானியா விலகலால் எங்கள் நட்புறவில் எந்த மாறுதலும் இருக்காது” என கூறினார்.

தற்போது பிரித்தானியா, கனடாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg