Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியாமான விலையில் வீடுகள்: ஒன்ராறியோவின் நிதி அமைச்சர் சார்லெஸ் சூசா தகவல்

In கனடா
Published: 12:21 GMT, Mar 30, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Anojkiyan
can

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் நியாமான விலையில் வீடுகள் வழங்குவது தொடர்பிலான திட்டமும் உள்ளடக்கப்பட இருப்பதாக ஒன்ராறியோவின் நிதி அமைச்சர் சார்லெஸ் சூசா தெரிவித்துள்ளார்.

ரொரன்ரோ மற்றும் ஹமிட்டன் பகுதிகளில் வீடுகளுக்கு அதிக கேள்வி உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒன்ராறியோவில் வீட்டு விலைகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினராலும் வெளியிடப்படும் எதிர்வுகூறல்கள், நாட்டிற்கு வெளியில் உள்ளவர்களின் கருத்துக்கள், வேறு பகுதிகளில் இருந்து ஒன்ராறியோ நோக்கி நகர்வோரால் அதிகரிக்கும் வீட்டுத் தேவைகள் என்பவை இந்த வீடுகளுக்கான கேள்விகளை உருவாக்குவதில் அதிக செல்வாக்கு செலுத்துவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதேவேளை இந்த வீட்டு விலைகளின் அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் பொருளியல் ஆய்வாளர்கள், இலாபம் ஈட்டும் நோக்குடன் வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையே வீட்டு விலைகளின் அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg