Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் மண்டியிட்டது மேற்கிந்திய தீவுகள் அணி

In கிாிக்கட்
Published: 04:18 GMT, Mar 31, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Anojkiyan
ind

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, நான்கு போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சொயிப் மலிக் 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நரைன் மற்றும் பிரத்வெயிட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைதொடர்ந்து, 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்கள் மாத்திரமே பெறமுடிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக சாமுவேல்ஸ் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் 4 விக்கெட்டுளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த சதாப்கான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg