Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்து

In இந்தியா
Published: 06:24 GMT, Mar 31, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Surenth
Tamilnadu Bar

அனைத்து மதுக்கடைகளையும் மூடி பூரண மதுவிலக்கை தமிழக அரச முன்னெடுக்க வேண்டும் என டொக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கின்ற விடயமானது தமிழக அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது போன்று அமைகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகள் மூலம் இலாபம் கிடைக்கின்றது என்பதற்காக மது அருந்தி விட்டு வீதியில் செல்பவர்களால் ஏற்படும் விபத்துக்களை தமிழக அரசு பொறுப்பு ஏற்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தனி நபர் ஒருவர் மது அருந்தி வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டால் அவரின் குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றது எனவும் இந்த போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாநில பிரதான வீதிபகுதிகளிலும் அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள 3,321 மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூடவேண்டும் எனவும் டொக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg