Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியை கடுமையாக விமர்சித்த பிராட் ஹொட்ஜ் மன்னிப்பு கோரினார்

In கிாிக்கட்
Published: 05:50 GMT, Mar 31, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Anojkiyan
brad

தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்ரேலிய அணிக்கெதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியை கடுமையாக விமர்சித்த அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹொட்ஜ் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

காயத்தால் விளையாட கோஹ்லி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் களமிறங்கினால் அது அவமானமானது என பிராட் ஹொட்ஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டார்.

குறித்த கருத்து கடும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், தனது கருத்திற்கு இந்திய மக்கள், ரசிகர்கள், இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் குறிப்பாக விராட் கோஹ்லியிடம் மன்னிப்பு கோருவதாக பிராட் ஹொட்ஜ் தெரிவித்துள்ளார்.

யாரையும் காயப்படுத்துவதோ, விமர்சிப்பதோ அல்லது தரக்குறைவாக பேசுவதோ தனது எண்ணம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹொட்ஜ் விரைவில் அணியில் இணைய உள்ளமை குறிப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg