Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசியர்கள் நாடு திரும்பினர்

In
Published: 05:54 GMT, Mar 31, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Elakkiya

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரர் கிம் ஜொங் நம்மின் கொலையை தொடர்ந்து வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது மலேசியர்களும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த ஒன்பது பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாலம்பூர் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

அத்துடன் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வட கொரியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் கிம் ஜொங் நம்மின் உடலும் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர உடன்படிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் விஷ தாக்குதலுக்கு இலக்காகிய கிம் ஜொங் நம் உயிரிழந்தார். அவருடைய கொலை சம்பவத்தில் வட கொரியாவைச் சேர்ந்த பலரும் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வட கொரியாவே திட்டமிட்டு இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளன.

இந்நிலையில் இரு நாடுகளும் மலேசியா மற்றும் வடகொரிய மக்களை தமது நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg