Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இ.தொ.கா. விளம்பர பலகை இனந்தெரியாதோரால் சேதம்

In இலங்கை
Updated: 09:41 GMT, Mar 31, 2017 | Published: 08:58 GMT, Mar 31, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Risha
pathana

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை சந்தியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளார்களின் விளம்பர பலகை இனந்தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் நேற்று (வியாழக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த நாசக்கார செயல் குறித்து பத்தனை பொலிஸ் நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் முறைபாடு செய்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், மற்றும் ஆதரவாளர்களின உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட விளம்பர பலகையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg