Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தந்தை செல்வாவின் 119ஆவது ஜனனதினம் வடக்கு – கிழக்கில் அனுஷ்டிப்பு

In இலங்கை
Published: 09:29 GMT, Mar 31, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Risha

தமிழர்களின் தந்தை எனப் போற்றப்படும் தமிழரசுக் கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 119ஆவது ஜனனதினம் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு- கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் ஜனனதினம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, வட. மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் க.கமலேஸ்வரன் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் வட. மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை தலைவருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் ஜனனதின நிகழ்வுகள், வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாகாண சுகாதார அமைச்சரினால் நினைவுரையும் ஆற்றப்பட்டது. நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னாரில், மன்னார் மாவட்ட தந்தை செல்வா அறங்காவல் அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனிமார்க் தலைமையில் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன்போது, மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு உருவச்சிலைக்கு மாலை அனுவிக்கப்பட்டு, சிறப்பு உரைகளும் இடம்பெற்றது.

நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் எம்.பி.எஸ்.வினோ நோகராதலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ, தமிழரசுக்கட்சியின் மாவட்ட தலைவர் தி.பரஞ்சோதி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் ஜனனதினத்தை முன்னிட்டு, ‘தந்தை செல்வா பிறந்த தினத்தில் உதிரம் கொடுத்து உதிரம் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகோஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், இளைஞர் அணித்தலைவர் செயோன் ஆகியோர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவபடத்திற்கு மலர் மாலை அணிவித்தனர்.

இதனை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு ரத்த தானம் செய்திருந்தனர்.

sel selva ma

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg