Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலேப்போவில் கார் குண்டு தாக்குதல்: 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:21 GMT, Apr 16, 2017 | Published: 04:21 GMT, Apr 16, 2017 |
0 Comments
1656
This post was written by : Anojkiyan

சிரியாவின் அலேப்போ நகரில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 55 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மீட்பு சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது.

நேற்று (சனிக்கிழமை) கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள ரஷிதீன் என்ற பகுதியில் கார்களை குறித்து வைத்து ரிமோர்ட் மூலம் இயக்கப்பட்டு குறித்த கார்களை தீவிரவாதிகள் வெடிக்கச்செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஆதிகம் செலுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தயிருக்ககூடுமென அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg