Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொடமுல்ல குப்பைக்கு முழு நாட்டு மக்களும் பொறுப்புகூற வேண்டும்: சம்பிக்க

In இலங்கை
Published: 04:44 GMT, Apr 16, 2017 |
0 Comments
1576
icon_com
This post was written by : Ravivarman
patali-champika-ranawaka_mini

மீதொடமுல்லயில் கொட்டப்படும் குப்பைகள் கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

குப்பைமேடு சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீதொடமுல்ல குப்பை முகாமைத்துவம் தொடர்பில் இற்றைக்கு 2 தசாப்தங்களுக்கு முன்னர் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பல இடங்களிலுமுள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம் என முன்னர் மக்கள் கோஷம் எழுப்பத் தொடங்கியிருந்தனர்.

உண்மையில் இங்கு சேருகின்ற குப்பை கொழும்பு மக்களுக்கு மட்டும் உரியதல்ல. கொழும்பு நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை லட்சம் பேர். ஒவ்வொரு நாளும் வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம்.

இவ்வாறு வரும் பத்து லட்சம் பேரும் பயன்படுத்தும் குப்பைகளும் இதில் அடங்குகின்றன. எனவே, யாரும் இதனை கொழும்பு மக்களின் குப்பையாக கருத முடியாது” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg