Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

51 ஓட்டங்களால் பஞ்சாப் அணியை வென்றது டெல்லி அணி

In கிாிக்கட்
Published: 05:00 GMT, Apr 16, 2017 |
0 Comments
1354
icon_com
This post was written by : Surenth
Delhi Daredevils v Kings XI Punjab

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கும் இடையிலான போட்டியில் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த போட்டியில் பில்லிங்ஸ் மற்றும் அண்டர்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி வென்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 188 ஓட்டங்களை பெற்றது.

டெல்லி அணி சார்பில், பில்லிங்ஸ் 40 பந்துக்களில் 55 ஓட்டங்களையும் அண்டர்சன் ஆட்டமிழக்காமல் 22 பந்துக்களில் 3 ஆறு ஓட்டங்கள், 3 நான்கு ஓட்டங்கள் உட்பட 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

189 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 137 ஓட்டங்களை பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg