Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவிகளை வழங்கும்: ஜப்பான் பிரதமர்

In இலங்கை
Published: 05:36 GMT, Apr 16, 2017 |
0 Comments
1354
icon_com
This post was written by : Ravivarman
japan

மீதொட்டுமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ள விசேட செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பாதிக்கப்பட்ட குறித்த பிரதேச மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மீளவும் திரும்புவதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

அத்துடன் இந்த அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதுடன் இலங்கை அரசிற்கான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அவர்கள் வழங்கவுள்ளனர்.

மேலும் இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு கொள்கின்றேன்” என ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg