Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தாய்ப்பால் புரைக்கேறியதால் குழந்தை உயிரிழப்பு

In
Updated: 08:42 GMT, Apr 16, 2017 | Published: 08:04 GMT, Apr 16, 2017 |
0 Comments
1154
babay deth 44f

மட்டக்களப்பு, ஏறாவூரில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக குழந்தை உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தையான சலீம் பாத்திமா சபா எனும் பெண் குழந்தையே நேற்றையதினம் (சனிக்கிழமை) நள்ளிரவு வேளை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயாரால் பாலூட்டப்பட்ட பின்னர், தூக்கத்தில் இருந்து சிறிது நேரத்தின் பின் கண்விழித்துப் பார்த்த போது குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளதையடுத்து, உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீரினால் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)