Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விருப்பம்: கம்பீர்

In கிாிக்கட்
Published: 08:56 GMT, Apr 16, 2017 |
0 Comments
2658
icon_com
This post was written by : Surenth
Gautam Gambhir

தான் ஒரு டெல்லி மகன் என்பதால் தனக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விருப்பம் உள்ளது என கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இறுதி காலத்தில் தனக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்து விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கம்பீர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2012 மற்றும் 2014 இல் ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்ட கம்பீர் அந்த பருவகாலத்தில் 14 போட்டிகளில் பங்கெடுத்து 524 ஓட்டங்கள் குவித்ததோடு 2010ஆம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg