Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரதான வைத்தியசாலைகளில் தனியான டெங்கு சிகிச்சைப் பிரிவுகள்: அமைச்சர் ராஜித

In இலங்கை
Updated: 07:55 GMT, Apr 17, 2017 | Published: 07:19 GMT, Apr 17, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Ravivarman
rajitha-senaratna

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பிரதான வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சைப் பிரிவுகளையும், விடுதிகளையும் அமைக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேல் மாகாணத்தில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில, பாணந்துறை மற்றும் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலை ஆகியன, டெங்கு சிகிச்சைக்கான விசேட பிரிவுகளை அமைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கராப்பிட்டிய வைத்தியசாலை ஆகியனவும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு வைத்தியசாலைகளும் இதற்கென தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தீவிர சிகிச்சைப் பிரிவு விடுதிகளும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன” என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg