Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது என்கிறார் மஹிந்தர்

In இலங்கை
Published: 13:59 GMT, Apr 17, 2017 |
0 Comments
3645
icon_com
This post was written by : Vithushagan

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்ததென்றும்  யுத்தத்தில் தனக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பாரிய பங்குள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்துக்கு நான் இந்தியாவிடம் உதவி கேட்கவில்லை. மாறாக இந்தியா முன்வந்து பல்வேறு உதவிகளை செய்திருந்தது.

சாதகமான வழிகளின் ஊடாக பல உதவிகளை வழங்கியது. உண்மையில் அது என்னுடைய போர் இல்லை. மாறாக இந்தியாவின் போர் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை உட்பட பலரது கொலைகளின் பின்னணியில் புலிகள் இருந்ததன் விளைவாகவே இந்தியா இந்த யுத்தத்தை முன்னின்று செய்தது.

இது மனிதாபிமான போர். இதற்கு இந்தியா மட்டுமல்ல, சீனா, பாகிஸ்தான், பிரித்தானியா, அமெரிக்க போன்ற நாடுகளும் உதவி புரிந்திருந்தன” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg