Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிக்கு தகுதியான அணியாக நாம் இருக்க முடியாது: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 06:13 GMT, Apr 18, 2017 | Published: 05:32 GMT, Apr 18, 2017 |
0 Comments
1110
This post was written by : Risha
KOHLI_2825541f

புனே அணிக்கெதிராக விளையாடியதுபோல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நாம் வெற்றிக்கு தகுதியான அணியாக இருக்க முடியாது என ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து வீரர்களும் பொறுப்புடன் செயற்பட்டால் அணியை வெற்றிப் பாதையில் கொண்டுச் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில், பெங்களூர் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி இதுவரை ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 9 போட்டிகளில் விளையாடவுள்ள பெங்களூர் அணி, அடுத்த நிலைக்கு முன்னேற ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg