Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் இணைந்தார் கிரண் பவல்

In விளையாட்டு
Updated: 07:03 GMT, Apr 18, 2017 | Published: 06:39 GMT, Apr 18, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Risha
powell-1451551741-800

சுமார் மூன்று ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் கிரண் பவல் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இவர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்லன் சாமுவேல், டேரன் பிராவோ மற்றும் லியோன் ஜொன்சன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக பவலுடன், 13 பேர் கொண்ட அணியில் விஷால் சிங் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் குறித்த வீரர்கள் மூவரும் சிறப்பாக சோபித்த நிலையிலேயே இவர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg