Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தோனி யாருக்கும் எதனையும் நிரூபிக்க தேவையில்லை: ஷேன் வோர்ன்

In விளையாட்டு
Updated: 08:35 GMT, Apr 18, 2017 | Published: 07:17 GMT, Apr 18, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Risha
dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, யாருக்கும் எதனையும் நீரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம்பெற்றுள்ள தோனி, சிறப்பாக சோபிக்க தவறியுள்ளதால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஷேன் வோர்ன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், தோனி ஒரு சிறந்த வீரர் மாத்திரமன்றி, அனைத்து வீரர்களையும் ஒழுங்காக வழிநடத்தக் கூடிய மிகச்சிறந்த அணித்தலைவரும் ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் புனே அணி சார்பில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள தோனி இதுவரை வெறும் 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg