Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துருக்கியில் மூன்று மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனம்

In ஐரோப்பா
Updated: 09:55 GMT, Apr 18, 2017 | Published: 08:03 GMT, Apr 18, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Sylviya
07

துருக்கியில் எதிர்வரும்  மூன்று மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை துருக்கியின் துணை பிரதமர் நூமான் கர்ட்டலமஸ் (Numan Kurtulmus) நேற்று (திங்கட்கிழமை) அங்காராவில் நடத்தப்பட்ட  செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அவசர நிலை நாளை முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப்புரட்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்படவுள்ள மூன்றாவது அவசர நிலை இதுவாகும்.

ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது குறித்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எர்டோகன் வெற்றியடைந்துள்ள போதிலும் குறித்த கருத்துக்கணிப்பின் போது சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், பல பகுதிகளில் கருத்துக்கணிப்பின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு இந்த அவசர நிலை பிரகனடப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg