Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துருக்கி கருத்துக்கணிப்பின் எதிரொலி: இஸ்தான்புல்லில் பாரிய ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 11:05 GMT, Apr 18, 2017 | Published: 08:22 GMT, Apr 18, 2017 |
0 Comments
1255
icon_com
This post was written by : Sylviya
08

துருக்கியின் அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்தான்புல்லில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் “வன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை” மற்றும் “கஷ்டம் எம்மை தொடர்கிறது”  போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்துக்கணிப்பின் போது, சுமார் 25 மில்லியன் மக்கள் ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும், 1.3 மில்லியன் மக்கள் எர்டோகனுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது எனவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg