Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உணர்வுகளை கட்டுப்படுத்துவது மன ஆரோக்கியத்தை பாதிக்கும்: இளவரசர் வில்லியம்

In
Updated: 11:41 GMT, Apr 18, 2017 | Published: 10:24 GMT, Apr 18, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Sylviya
11

மனிதர்கள் தத்தமது மனதில் உள்ள உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் உணர்வுகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பது மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் எனவும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

மன ஆரோக்கியம் மற்றும் ஆண்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் அக்கறை காட்டும் வில்லியம், இன்று (செவ்வாய்க்கிழமை) பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

தனது குழந்தைகளும் மனம் திறந்து பேசக்கூடியவர்களாக உருவாகுவதையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது தாய் இளவரசி டயானாவின் திடீர் உயிரிழப்பின் பின்னர் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க சுமார் 20 வருட காலமாக அந்த விடயத்தை நினைவு கூறுவதில் தயக்கம் காட்டி வந்ததாகவும் பின்னர் கவுன்சிலிங் என அழைக்கப்படும் மருத்துவ ஆசோசனை பெற்றதாகவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இளவரசர் வில்லியம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்த வழிப்புணர்வு தொடர்பில் அவர் பொப் இசைப் பாடகி லேடி ககாவுடனும் (Lady Gaga) உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg