Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர்கள் அடிமைகளா? – சுரேஸ்

In இலங்கை
Updated: 12:16 GMT, Apr 18, 2017 | Published: 11:37 GMT, Apr 18, 2017 |
0 Comments
1286
This post was written by : Surenth
Train Gate

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக் காப்பாளார்கள் இந்த நல்லாட்சியிலும் அடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை காப்பாளர்களாக ஆயிரத்து 230 பேர் கடந்த 4 வருடங்களாக கடமையாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு இன்றுவரை நிரந்தர நியமனமோ அல்லது தற்காலிக கடமையாளர் நியமனமோ வழங்கப்படவில்லை. எந்த விதமான எழுத்து  மூலமான ஆவணங்களின்றி அவர்கள் பணியிலமர்த்தப் பட்டுள்ளனர்.

இவாறு அவர்கள் அடிப்படைத்  தொழில் உரிமைச் சட்டத்திற்கு முரணான விதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

அரச திணைக்களம் ஒன்றில் தொடர்ந்து 180 நாட்கள் பணியாற்றினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், இருந்தும் இதுவரை அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் கட்டாயப்படுத்தி கடமைக்கு அமர்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாவட்ட பொலிஸ் காரியாலங்களில் மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு அவர்கள் எவ்வாறு வாழ்கையை நடத்துவது?

நாட்டில் நீதியையும் சட்டத்தையம் நிலை நாட்ட வேண்டியவர்களே இன்று பாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர்களை கடமைக்கு அமர்த்தி நீதியையும் சட்டத்தையும் புறக்கணித்து அடிமைகளை போல நடாத்துகின்றனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.