Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானிய பொதுத் தேர்தல்: பவுண்ஸின் பெறுமதி அதிகரிப்பு

In
Updated: 12:45 GMT, Apr 18, 2017 | Published: 12:28 GMT, Apr 18, 2017 |
0 Comments
1334
icon_com
This post was written by : Sylviya
15

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை தொடர்பில் பிரதமர் தெரேசா மே அறிவிப்பு விடுத்துள்ள நிலையில், பவுண்ஸின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பங்குச் சந்தையிலும் தளம்பல்  நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பிரித்தானிய நாடாளுமன்றின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிரதமர் மேயின் இத் திடீர் அறிவிப்பே தளம்பலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த பிரதமர் மே, குறித்த தீர்மானத்தை தான் மிகுந்த தயக்கத்துடனேயே மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் இலகுபடுத்தப்படும் எனவும் மே சுட்டிக்காட்டியுள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியா ஒருங்கிணைந்துள்ள போதிலும், நாடாளுமன்றம் ஒருங்கிணையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள தேர்தல் தொடர்பில் நாளை கொண்டுவரப்படவுள்ள மசோதாவிற்கு தொழிற்கட்சி ஆதரவளிக்கும் எனவும் இந்த தேர்தல் குறித்த முடிவை வரவேற்பதாகவும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg