Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லசந்த கொலை: முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

In
Published: 13:39 GMT, Apr 18, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Ravivarman
Lasantha-626x380

 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வாதற்காக முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் 3பேர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவரும் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணியவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் முப்படைகளின் பிரதானி ஏயார் ஷீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மற்றும் மேஜர் ஜெனரல் குமார் ஹேரத் ஆகியோரை இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர். அண்மையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக முன்னாள் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

லசந்த கொலை இடம்பெற்றகாலப்பகுதியில் வன்னி கட்டளை தளபதியாக ஜகத் ஜயசூரிய கடமையாற்றியிருந்தார். லசந்தவின் கொலையுடன் முன்னாள் இராணுவ புலனாய்வாளர்கள் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையிலேயே இவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg