Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்

In இலங்கை
Updated: 04:58 GMT, Apr 19, 2017 | Published: 03:33 GMT, Apr 19, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Risha
President-Maithripala-Sirisena

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இன்று (புதன்கிழமை) முற்பகல் வேளையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டத்தின் போது, அனர்த்தத்தின் பாதிப்புகள் குறித்த கணிப்பீடு முன்வைக்கப்படவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் என்பன தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 31ஆக அதிகரித்துள்ளதாகவும், 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடும் பணிகள் இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg