Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் மூவர் உயிரிழப்பு

In
Published: 04:21 GMT, Apr 19, 2017 |
0 Comments
1294
This post was written by : Sylviya

இனப்படுகொலைக்கு வித்திடும் வகையில், கலிஃபோர்னியாவின் ப்ரெஸ்னோ பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டதாகவும் கொரி அலி முஹம்மட் (Kori Ali Muhammad) என்பவர் 90 செக்கன்களில் 16 முறை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், தாக்குதலை மேற்கொண்டவர் கடவுள் ஒருவரே மகத்துவமானவர்” என அரேபிய பாஷையில் உரக்கக் கத்தியதாகவும் ஆனால் இது இனவெறியினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இச் சம்பவத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தாக்குதலை நடத்தியவரே கடந்த வாரம் நடத்தப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குற்றவாளியின் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் வெள்ளையர்களை அவர் வெறுப்பதாகவும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அவர் பகிர்ந்து வந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg