Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல பகுதியில் மீண்டும் சரிவு அபாயம்: கட்டிட ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

In இலங்கை
Updated: 09:33 GMT, Apr 19, 2017 | Published: 04:54 GMT, Apr 19, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Risha
meethutamulla-626x380

மழை பெய்யும் பட்சத்தில் மீதொட்டமுல்ல குப்பைமேட்டு பகுதியில் மீண்டும் சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட  ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளை கைவிட்டு, நிரந்தர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய கட்டிட   ஆராய்ச்சி மையத்தின் மண்சரிவு ஆய்வு நிபுணர் ஆர்.டிம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “குறித்த பகுதியில் தற்போதைக்கு குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளதால் ஆபத்துக்கள் இல்லை என்ற போதிலும், எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்யும் பட்சத்தில் மற்றுமொரு அனர்த்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இதனால் குறித்த பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆபத்தான பகுதியில் சுமார் 130 வீடுகள் காணப்படுகின்றன. எனவே அங்குள்ள மக்களும் வெளியேற்றப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11பேர்வரை காணாமல் போயுள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg