Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லிபிய மீனவர்களால் 28 குடியேற்றவாசிகளின் சடலங்கள் மீட்பு

In ஐரோப்பா
Published: 08:22 GMT, Apr 19, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Sylviya

லிபியாவின் சப்ரத்தா நகருக்கு அருகிலிருந்து சுமார் 28 குடியேற்றவாசிகளின் சடலங்களை மீனவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மீட்கப்பட்ட குறித்த சடலங்களில், நான்கு பெண்களின் சடலங்களும் உள்ளடங்குவதாக லிபிய உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த குடியேற்றவாசிகள் வந்த கப்பல் உடைந்து கரையொதுங்கிய நிலையில், அவர்கள் பசி மற்றும் கடும் தாகம் ஆகிய காரணங்களால் உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள் யாவும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் சடலங்களை புதைக்கும் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு தளபதி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு செல்லும் குடியேற்றவாசிகள் தங்கிச் செல்லும் முக்கிய புள்ளியாக லிபியா மாறியுள்ள நிலையில், லிபியா ஊடாக கடந்த மூன்று வருடங்களில் இத்தாலியை சென்றடைந்த மொத்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 150,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg