Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

In இந்தியா
Published: 12:05 GMT, Apr 19, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Shailu
dinakaran

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அ.தி.முக-வின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

குறித்த வழக்கு நீதிபதி மலர்மதியின் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் மே 10ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் இவ்வழக்கின் சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.முக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து கடந்த 1996ஆம் ஆண்டு லண்டனில் இருந்து ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தனர்.

இதன்மூலம் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.  இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் விடுவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg