Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

In இந்தியா
Published: 05:12 GMT, Apr 20, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Shailu
farmers

கடந்த 37 நாட்களாக தமிழக விவசாயிகள் முன்னெடுத்து வந்த நூதனப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் நேற்று (புதன்கிழமை) விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் எதிர்வரும் 22ஆம் திகதி கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் மத்திய அமைச்சரிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 37 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

எலிக்கறி உண்ணும் போராட்டம், பாம்பு கறி உண்ணும் போராட்டம், தாலி அறுக்கும் போராட்டம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் போராட்டத்தின் உச்சமாக நிர்வாண போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg