Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலியும் அமெரிக்காவும் தமது ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துமென எதிர்பார்ப்பு

In ஐரோப்பா
Published: 09:36 GMT, Apr 20, 2017 |
0 Comments
1192
This post was written by : Elakkiya

புவியியல் ரீதியில் இத்தாலியின் அமைவிடமானது அமெரிக்காவிற்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகின்ற நிலையில், சர்வதேச உறவுகளில் இரு நாடுகளும் தமது ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இத்தாலி பிரதமர் பவுலோ ஜென்டிலோனி, இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப ஏப்ரல் மாத முற்பகுதியில் சிரியா மீது அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இத்தாலிய அரசு ஆதரவு தெரிவித்திருந்தது.

இவற்றினை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச உறவுகளில் இரு நாடுகளும் தமது ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக் கொள்ளும் என்று இத்தாலிய நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg