Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கனடாவுடன் ஸ்கொட்லாந்து விரைவில் இணையும்: எழுத்தாளர் கென் மக்கூகன்

In கனடா
Updated: 09:56 GMT, Apr 20, 2017 | Published: 09:44 GMT, Apr 20, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Anojkiyan
scot-600x352

பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து விலகி கனடாவுடன் இணையும் என பிரபல கனேடிய எழுத்தாளர் கென் மக்கூகன் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து விலகுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், மக்கூகனின் கருத்து அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது.

மேலும், ஸ்கொட்லாந்தை 11வது மாகாணமாக கனடாவுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பொன்றையும் அவர் விடுத்துள்ளார்.

4.7 மில்லியன் கனேடியர்கள் மத்தியில், ஸ்கொட்லாந்தின் மரபுக் கொள்கை மற்றும் நாட்டின் கலாசார தாக்கங்கள் என்பன ஏற்கனவே ஆழமாக பதிந்து விட்டதென கென் மக்கூகன் மேலும் கூறியுள்ளார்.

5.3 மில்லியன் சனத்தொகையை கொண்ட ஸ்கொட்லாந்து கனடாவின் மூன்றாவது சனத்தொகை கூடிய மாகாணமாகவும் விளங்குமெனவும் பிரித்தானியாவில் இருப்பதை விட கனடாவில் ஸ்கொட்லாந்து அதிக செல்வாக்கை கொண்டிருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg