Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் அணியுடனான தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மேற்கிந்திய தீவுகள்

In கிாிக்கட்
Updated: 05:39 GMT, Apr 21, 2017 | Published: 05:35 GMT, Apr 21, 2017 |
0 Comments
1371
This post was written by : Anojkiyan

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்,  முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

கிங்ஸ்டனில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும், பாகிஸ்தான் அணிக்கு மிஸ்பா உல் ஹக்கும் தலைமைதாங்குகின்றனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இதற்கு முன்னதாக நடைபெற்ற ரி-ருவென்ரி மற்றும் ஒருநாள் தொடரை வென்றது.

இந்த இரு தொடரின் தோல்வியின் தாக்கதால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இத்தொடரில் தனது திறமையை நிரூபித்தே காட்ட வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தொடருடன் பாகிஸ்தான் அணியின் தடுப்பு சுவராக விளங்கும் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனுஸ்கான் ஆகியோர் ஓய்வுபெறுவதால் அவர்களை வெற்றியுடன் வழியனுப்பி வைக்க பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும். அதனால் இப்போட்டியில் இரு அணிகளும் அனல் பறக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg