Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறிய நீர்த்தேக்கங்களுக்கு அண்மையில் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்: ஜனாதிபதி

In இலங்கை
Published: 09:07 GMT, Apr 21, 2017 |
0 Comments
1223
This post was written by : Ravivarman
jana

சிறிய நீர்த்தேக்கங்களுக்கு அண்மையில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான விசேட கூட்டம் ஜனாதிபதி காரியாலயத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. தற்போது தேசிய சிறு அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக 340 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றது.

இதனை 550 மெகாவோட்டுக்களாக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை இனங்காணல், தேசிய நீர்மின் உற்பத்தி நிலைய அபிவிருத்தியாளர்கள் அந்த துறையில் எதிர்நோக்கும் சவால்கள், புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்திக்கான தேசிய இலக்கினை எட்டுவதற்கான புதிய செயன்முறைகளை இனங்காணல், சூழல் சமநிலை பேணப்படும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான புதிய முறைகளை இனங்காணல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிறிய அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிச் சான்றிதழ்களை வழங்கும்போது புதுப்பிக்கத் தக்க புதிய தொழில்நுட்ப முறைகளை உபயோகிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg