Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கர்ப்பமாகவுள்ள செரீனா வில்லியம்ஸ்க்கு ஏஞ்சலிக் கெர்பர் வாழ்த்து

In டெனிஸ்
Published: 10:10 GMT, Apr 21, 2017 |
0 Comments
1312
icon_com
This post was written by : Anojkiyan
sar

அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், கர்ப்பமாக இருப்பதனை அவரது செய்தி தொடர்பாளர் கெல்லி புஷ் நோவக் உறுதி செய்துள்ள நிலையில், அவருக்கு நம்பர் ஒன் வீராங்கனையான ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “நீங்கள் ஒரு அற்புதமான அம்மாவாக இருப்பீர்கள். உடல் நலத்தோடு இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வயிறு சற்று பெருத்து இருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்ட செரீனா அதில் 20 வாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது.

இதற்கிடையே, செரீனா கர்ப்பமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த ஆண்டு முழுவதும் விளையாடமாட்டார் எனவும் அடுத்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பு வரை களம் திரும்ப வாய்ப்பில்லை எனவும் அவரது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அவுஸ்ரேலிய ஓபனை வென்ற 35 வயதான செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஓஹானியனை காதலித்து, கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg