Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டொன் வெலி பார்க்வே பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர்; காயம்

In கனடா
Published: 11:03 GMT, Apr 21, 2017 |
0 Comments
1107
This post was written by : Anojkiyan
toronto-dvp-rollover

டொன் வெலி பார்க்வேயில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொன் வெலி பார்க்வேயின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில், பே வியூ மற்றும் பூலர் வீதித் பகுதியிலேயே குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) சம்பவித்துள்ளது.

இதில் இருவர் சிறிய காயத்திற்குள்ளாகியுள்ளதாகவும் மற்றொருவர் ஆபத்தான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் மருத்துவபிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விதிமுறைகளுக்கு மாறாக வாகனத்தைச் செலுத்திச் சென்றதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்ககூடுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் வாகன சாரதி ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், இவ் விபத்து குறித்து தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg