Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பலாலிக் காணிகளை இராணுவம் கைவிடாது – சுமந்திரன்

In
Updated: 14:20 GMT, Apr 21, 2017 | Published: 14:08 GMT, Apr 21, 2017 |
0 Comments
1348
This post was written by : Vithushagan
suma

பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்து காணப்படும் 4 ஆயிரம் ஏக்கர் பகுதியை விடுவிப்பது தொடர்பாக இடம்பெற்ற  பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லையென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான கலந்துரையாடல், இன்று(வெள்ளிக்கிழமை)  யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் இருக்கின்ற ஏனைய பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன எனவும் இராணுவத்தினரிடம் உள்ள சில காணிகளை விடுவிப்பதாக  அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், தனியார் காணிகளை விடுத்து அரச காணிகளில் பாதுகாப்பு கருதி இடங்கள் தேவைப்படின் அவைகளை இராணுவத்தினரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அத்துடன், காணிகள் குறித்த விபரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள் என்றும் பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலாரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner